தொடர் உயர்ர்ர்ர்வில் தங்கம் விலை.. கிடுகிடுவென சவரனுக்கு ரூ.840 உயர்வு.. ஆவணி தொடக்கமே அதிரடி!

Aug 17, 2024,12:34 PM IST

சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து 53,360க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமிற்கு இன்று ரூ.105 உயர்ந்து 6,670க்கு விற்கப்படுகிறது.


ஆவணி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. காரணம், ஆவணியில் நிறைய முகூர்த்தம் வரும். கல்யாணத்திற்கு நகை வாங்கத் திட்டமிட்டோர் திகைத்து உள்ளனர்.


மத்திய அரசு சுங்க வரியை குறைத்த பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 வரை குறைந்த தங்கம், அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மீண்டும் மற்றொரு புதிய உச்சத்தை தொட்டுவிடுமோ என்று வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆவணி மாதம் விஷேசங்கள் அதிகம் என்பதால் நகைப்பிரியர்களுக்கு இந்த விலை உயர்வு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.105 அதிகரித்து 6,670 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,360 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.66,700 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,67,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,277 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,216 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.72,770 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,27,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,670க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,277க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,685க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,292க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,670க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,277க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,670க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,277க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,670க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,277க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,670க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,277க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,675க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,282க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் 91க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 728 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.910 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,100 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91,000 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்



சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்