கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. அதுவும் சவரனுக்கு ரூ.400 உயர்வு.. கடைக்குப் போறதா வேண்டாமா?

Aug 21, 2024,12:04 PM IST

சென்னை: சென்னையில் இன்றைய 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை  எந்த  மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது .


நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுகு்கு ரூ.400 உயர்ந்துள்ளது. நிலையற்ற விலையிலேயே தங்கம் விலை இருந்து வருவது வாடிக்கையாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. என்று கூடும் என்று குறையும் என்று தெரியாமல் உள்ளது. இந்த நிலையற்ற விலை பெண்  குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில், தமிழகத்தில் எந்த விஷேசம் என்றாலும் நகையின் பங்கு அதிகம்.  தமிழகத்தில் நகையினை வைத்தே ஒருவருடைய பொருளாதார நிலையும் நிர்ணயம் செய்யப்படுகிற நிலையும் இருந்து வருகிறது.




சென்னையில் இன்றைய தங்கம் விலை 


சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து 6,710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,680 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.67,100 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,71,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,320 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,560 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.73,200 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,32,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,335க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.சென்னையில் இன்றைய வெள்ளி விலை  ஒரு கிராம் 92க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 736 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.920 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,200 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.92,000 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்