அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த இந்தியாவை, ஆஸ்திரேலியா அணி சந்திக்கிறது.
உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமாக போற்றப்படும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்தப் போட்டியைக் காண குவியவுள்ளனர்.
இந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிப் போட்டி வரை வந்துள்ளது இந்தியா. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

மறுபக்கம் முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த ஆஸ்திரேலியா 2வது அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இப்போது இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் தோற்றதற்கு இந்தியாவை பழி தீர்த்து கோப்பையை வெல்லுமா ஆஸ்திரேலியா அல்லது.. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இந்தியா தனது 3வது ஒரு நால் உலகக் கோப்பையை தட்டிச் செல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.
3வது கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்குமா?
இந்தியாவைப் பொறுத்தவரை கபில் தேவ் தலைமையில் முதல் உலகக் கோப்பை கிடைத்தது. 2வது உலகக் கோப்பை தோனி தலைமையிலான இந்திய அணிக்குக் கிடைத்தது. இப்போதைய கோப்பையை இந்தியா வென்றால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்குப் புதிய பெருமை கிடைக்கும்.
மறுபக்கம் ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 4 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று 2 முறை கோப்பையை வென்றுள்ளது.
நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாபெரும் சண்டை காத்திருக்கிறது.. பார்க்கலாம்.. வெல்லப் போவது இந்தியாவின் சார்பட்டா பரம்பரையா அல்லது ஆஸ்திரேலியாவின் கங்காரு பரம்பரையா!
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}