சீக்கியர்கள் கிர்பான் வைத்திருப்பதை தடை செய்த சட்டம் செல்லாது.. ஆஸி. கோர்ட்

Aug 05, 2023,01:24 PM IST
மெல்போர்ன்: சீக்கிய மாணவர்கள் பள்ளிக் கூடங்களுக்கு கிர்பான் கத்தியுடன் வருவதைத் தடை செய்யும் சட்டம், சட்ட விரோதமானது என்று ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வரும்போது கிர்பான் கத்தியைக் கொண்டு வரக் கூடாது என்று தடை விதித்து சட்டம் இயற்றியிருந்தது. கிர்பான் கத்தி என்பது சீக்கியர்களின் மத அடையாளங்களில் ஒன்று. தலைப்பாகை அணிவது, கிர்பான் கத்தி வைத்திருப்பது, தாடி வளர்ப்பது ஆகியவை சீக்கியர்களின் கடமைகளில் சில. 

குவீன்ஸ்லாந்து அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து கமல்ஜித் கவுர் அத்வால் என்பவர் கடந்த ஆண்டு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில், சீக்கியர்களின் ஐந்து மத அடையாளங்களில் ஒன்றுதான் கிர்பான். இந்த ஐந்து அடையாளங்களையும் எப்போதும் கூடவே வைத்திருக்க வேண்டும் என்பது எங்களுக்கு இடப்பட்டுள்ள மதக் கட்டளையாகும். எனவே இந்த சட்டமானது எங்களது மத உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த க்வீன்ஸ்லாந்து கோர்ட் தற்போது இந்த சட்டமானது, அரசியல்சாசனத்திற்கு புறம்பானது என்று கூறி  அதைச் செல்லாது என்று அறிவித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு ஆஸ்திரேலிய சீக்கியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்