சென்னை: ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை முடக்க முடியாமல் இந்தியா திணறி வருவதைப் பார்த்து ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர் . கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமா என்ற வருத்தமும், ஏமாற்றமும் ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஒரு தோல்வியும் காணாமல் ஒய்யாரமாக கெத்தாக வலம் வந்த அணி இந்தியா மட்டுமே. எந்தப் போட்டியிலும் அது தடுமாறவில்லை. இத்தனைக்கும், இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கில்லி மாதிரி ஜெயித்தது இந்தியா.

ஆனால் இன்று இறுதிப் போட்டியில் கடுமையாக திணறி விட்டது இந்தியா. முதலில் பேட்டிங்கில் சொதப்பியது. முக்கிய வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் மட்டுமே நல்ல ஸ்கோரை எடுத்தனர். ஆனால் மற்றவர்களால் பெரிதாக அடித்து ஆட முடியவில்லை. இதனால் பெரிய ஸ்கோரை இந்தியாவால் எட்ட முடியாமல் போனது. 240 ரன்களுடன் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
ஆனால் இப்போது பவுலர்கள் தடுமாறிக் கொண்டுள்ளனர். கடுமையாக போராடித்தான் பார்க்கின்றனர். ஆனால் 3 விக்கெட்களுக்கு மேல் ஒன்றும் நகரவில்லை. இந்திய பவுலர்களுக்கு பவுலிங் பிராக்டிஸ் போல மாறி விட்டது போட்டி. எப்படிப் போட்டாலும் விக்கெட் விழவில்லை. மிக மிக சாதுரியமாக ஆடி வருகிறது ஆஸ்திரேலியா.

டிரவிஸ் ஹெட் நிலைத்து நின்று விட்டார். அத்தோடு இல்லாமல் சதமும் அடித்து முடித்து விட்டார்.. மிகப் பெரிய சோகத்தில் மூழ்கியுள்ளனர் இந்திய ரசிகர்கள்.. வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா வேகமாக நகர்வதால் இந்தியர்கள் மொத்தப் பேரும் பெரும் ஏமாற்றத்திலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}