உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)

Apr 14, 2026,04:16 PM IST

- ரதி தேவி


அம்மா எழுப்ப எழுந்திருச்சா ரதி, முகம் கழுவி விட்டு வந்து போனை எடுத்தாள், எடுத்துப் பார்க்கும் போது மிஸ்டு கால் மற்றும் வாட்ச்அப் மெசேஜ் வந்திருந்தன.


ஆன் செய்தாள், மதனின் வாட்ச்அப் செய்திதான்,


"ஹாய் ரதி... என்ன பண்ற... கோவிலுக்குப் போனாயா... எனக்காக வேண்டினாயா? ஹாய் ரதி... ரதி..."


"ம்ம்... போகல மதன்..."


"ஏன் ரதி... கிளம்பினாயே... ஏன் போகல..."


"ம்ம்... அது...."


"பரவாயில்லை ரதி சொல்லு... ஏதாவது பிரச்சனையா... என்னால் முடிந்த உதவி செய்றேன்."




"ஆமா மதன்... என் ஹஸ்பண்ட் வந்து ரகளை பண்ணினார். அதனால் கோவிலுக்குப் போக மனமில்லை. வீட்டிலேயே இருந்துவிட்டேன்... ஸாரி மதன்..."


"இட்ஸ் ஓகே ரதி... நவ் ஆர் யு ஓகே"


"ம்ம்..."


"ரதி உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?"


"ம்ம்... சொல்லுங்க மதன்."


"அவருடன் வாழ உனக்கு விருப்பமா? இல்லையா? இதை மட்டும் கொஞ்சம் சொல்லு..."


"இல்லைதான்... அவர் எனக்குச் செய்த கொடுமையை மறக்க முடியுமா? முடியாது? விருப்பம் இல்லைதான்... ஆனால், அவன் என் நிம்மதியைக் கெடுக்கவே வருகிறான்... என்ன செய்வதென்று தெரியல..."


"கூல் ரதி... கொஞ்சம் கால் பண்ணலாமா? ரதி... பேசணும் போல உள்ளது."


ரதியின் இதயம் படபடத்தது. ஏன்... என்று யோசித்தாள்... மதனிடம் பேச விருப்பம்... ஆனால் ஏதோ மனம் மறுக்க... மதனின் பேச்சைத் தவிர்க்க முடியாமல்...


"ம்ம்..." பதிலளித்தாள்.


ரீங்... ரீங்...


"ஹலோ ரதி..."


"சொல்லுங்க மதன்..."


"ரதி எதற்கும் கவலைப்படாதே... உன் முடிவைப் பொறுமையாகவே சொல்லு... ஏனோ தெரியவில்லை உன்னிடம் பேசும்போது என் மனம் நிம்மதியடைகிறது... என் இதயம் உன் குரலில் இளைப்பாறுகிறது..."


"ம்ம்... ம்ம்... அனைத்தையும்... சுற்றியிருப்பதையும் மறந்துவிடுகிறேன்... ரதி..."


"மதன்... மதன்..."


"ரதி... கொஞ்சம் வெயிட்... அம்மா கூப்பிடுறாங்க... வரேன்... ப்ளீஸ்... ரதி..."


"ஓகே மதன்... ஐ வெயிட்..."


"என்னம்மா? சொல்லு..."


"மதன் ஒரு பொண்ணு காட்டினேன் அல்லவா? அவ பிடிச்சிருக்கா உனக்கு.."


"அம்மா... வேண்டாம் எனக்கு... என்னைக் கொஞ்சம் விடு... நான் அப்புறமா சொல்றேன்."


"மதன்... மதன்... நில்லுடா..."


"சொல்லும்மா... என்னைப் புரிஞ்சுக்கோ மா... எனக்குக் கொஞ்சம் டைம் கொடு..."


"டேய் மதன்... நான் மட்டும் இங்க தனியா இருக்கேன்... புரியுதா உனக்கு..."


"அம்மா... அப்போ என்கூட சென்னை வந்திடு..."


"என்னடா சொல்ற..."


"ஆமாம்மா... என்கூட வந்திடு... உன்னையும் கூட்டிட்டுப் போறேன்."


"இல்லடா... இங்க இருக்கிற வேலையெல்லாம் யாரை நம்பி விட... இங்கேயே இருந்து நம்ம தோப்பு, வயக்காட்டையெல்லாம் பார்த்துக் கொள்ளத்தான் ஒரு பொண்ணு தேடுறேன். நீயும் சென்னை போகாம இங்கேயே இருடா..."


"என்னால முடியாதும்மா... சென்னையில் வேலையை விட்டுட்டு இங்க இருக்க முடியாது மா..."


"டேய் மதன் நான் சொல்றத கேளு,"


"விடுமா... நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்"


வெளியே வந்து ரதியை நினைத்தான். ரதியோடு நம் வாழ்க்கை கண்டிப்பாக சுகமானதாகவே இருக்கும். ஆனால் ரதி இன்னும் முடிவு சொல்லவில்லை. ரதிக்கு கால் பண்ணலாம்.


ரீங்... ரீங்...


"ஹலோ மதன்... சொல்லுங்க."


"ஸாரி ரதி... கொஞ்சம் வேலை."


"பரவாயில்லை... சொல்லுங்க மதன்..."


"ரதி... உன் முடிவு சொல்லலையே..."


"கொஞ்சம் காலம் வேணும்.."


"ஓகே ரதி... எடுத்துக்கோ... உன் முடிவுக்காக மதன் காத்திருப்பான்..."


"உன்னைத் தவிர இனி என் வாழ்வில் வேறு யாரும் இல்லை... என்னைப் புரிந்துகொள்வாய் காலம் வெகுதொலைவில் இல்லை."


"விழுப்புரம் வந்த பிறகு, நான் உன்னைச் சந்திக்க அனுமதி வேண்டும் ரதியே. கிடைக்குமா? நாம் இருவரும் மறுபடியும் சந்திக்கும் அந்த நேரம் சுகமானதாகவே இருக்கும்... உன் கரம் பிடிக்க ஒரு பொழுது தருவாயா?"


"ம்ம்... மதன்.. சொல்றேன் மதன்..."


(தொடரும்)


முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்