மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும், வீரருக்கும் சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த போட்டிகளைக்கான வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்து பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள். நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, பொங்கல் தினமான நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக, வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள், காளைகள் வந்து செல்வதற்கான தடுப்புகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
வீரரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள்
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் காளைகள் காலை 6 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு (அதாவது அதிக காளைகளைப் பிடிப்பவருக்கு) முதலமைச்சர் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இன்றி இந்தாண்டு நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கு (அதாவது பிடிமாடாகமல் வெல்லும் காளையின் உரிமையாளருக்கு) முதல் முறையாக முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}