மதுரை: பொங்கல் தினமான நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7ம் தேதி தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, 2,035 காளைகளும், 1,735 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இதில், 1,100காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டோக்கன்களுக்கான பதிவிறக்கம் தற்போது தொடங்கியுள்ளது.
அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு எராளமான பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் எற்படாத வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் அவனியாபுரத்தில் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Memes: பாஸ் பாஸ்.. காதலி இல்லைன்னா பிப்ரவரி மாசம் மட்டும்தான் கஷ்டப்படணும்!
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
மீன் குழம்பு வச்சு.. அதுல கொஞ்சம் விஷம் கலந்து.. கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!
{{comments.comment}}