குழந்தைதானே.. அவருக்கும் ஓய்வு வேணும்ல.. அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ரெஸ்ட்!

Feb 17, 2024,05:20 PM IST

அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் தினமும் ஒரு மணி நேரம் நடை சாத்தப்படும் என்று அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பால ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி  கோலாகலமாக நடந்தது. இக்கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து முதல் பூஜையை செய்தார். பிரமாண்ட கோவிலில் பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு வெகு விமர்சையாக  நடந்து முடிந்தது. கர்ப்பகிரகத்தில் உள்ள ராம விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முடி இருந்த ராமர் கண்கள் திறக்கப்பட்டு, உயிர் பெறும் முக்கிய நிகழ்வு இனிதே நடந்தது.




500 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் இருந்த அயோத்தி தற்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது. தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமர். ராமர் பிறந்த இடத்தில்தான் இந்தக் கோவில் இப்போது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராமர் சிலை, பால ராமர் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் நடை தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறுகையில், ராம் லல்லா ஒரு ஐந்து வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும். அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் ராமர் கோவில் கதவை மதியம் 12:30 முதல் 1.30 வரை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதிகம் பார்க்கும் செய்திகள்