"ராம்" .. "ராம்".. "ராம்" .. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்ட கவிதை.. பரபரப்பான டிவிட்டர்!

Jan 23, 2024,10:36 AM IST

புதுச்சேரி: அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி நேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அவரது ஸ்டைலில் போட்ட கவிதை பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கமென்ட்டுகளையும் குவித்துள்ளது.


அவரது பாணி தமிழில் அதிரடியாக எழுதியிருந்தார் டாக்டர் தமிழிசை. அதற்கு ஆதரவாக பலரும், எதிர்த்து விமர்சித்து பலரும் பதில் கொடுத்திருந்தனர்.


"அக்கா ரிட்டர்ன்ஸ்" என்று அவரது ஆதரவாளர்கள் குதூகலிக்க, ஆளுநராக இருந்து கொண்டு இப்படி எழுதலாமாக்கா என்று பலர் ஆதங்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.


இதுதான் டாக்டர் தமிழிசை போட்டிருந்த டிவீட்டில் உள்ள கவிதை:




பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா "ராம்"

பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா "ராம்"

ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டா "ராம்"

அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா"ராம்" 

ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்"


ராமனை நீங்கள் விடுக்க முடியாது....

ராமனை நீங்கள் தடுக்க‌ முடியாது....

எங்களுக்குள்ளும் இருக்கிறார் "ராம்"....

உங்களுக்குள்ளும் இருக்கிறார் "ராம்"....


அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை

நெருப்பில் சுடுகிறார்  "ராம்"....


வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி பொறுப்பாய் ஆசி வழங்கும் ராமன் - அதுவே

நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்.....


எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்....

எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே "ராம்"நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை... அங்கு தேடி மோடி வந்தார்....

உல்லாச பயணம் வரவில்லை....

11- நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்....


அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க

தேரோட்டியின் தமையனாய் வந்தான் ராமன்....

ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்து ஒரு கூட்டம் அன்று....


இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு தழைக்கப்போகிறது பெருங்கூட்டம் ராமராஜ்ஜியத்தில்....


அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை.....

காணொளியில் பார்க்க தடையாம்- தமிழகத்தில்....


வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று...வென்று  பெற்றவர்களுக்கு

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....

தமிழ்நாடும் திரும்பி விட்டான்......

விரும்பி வணங்கிட தமிழர்கள் தயார்....

தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்....

கத்தியால் அல்ல.... பக்தியால்....

மககள் சக்தியால்...

ஜெய்ஸ்ரீராம்....

ஜெய்ஸ்ரீராம்....

ஜெய்ஸ்ரீராம்....

என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.... 


இதுதான் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் எழுதியிருந்த பதிவு.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்