திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஐயப்ப பக்தருக்கும் கோவில் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஐயப்ப பக்தருக்கு அடி விழுந்து மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் கோவில் நடை சாத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசியாவில் உள்ள கோவில்களிலேயே மிகவும் பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். பூலோக வைகுண்டம் என்று சிறப்பு பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் கோவில். 108 வைணவத் தலங்களில் முதன்மைத் தலமாகவும் இது விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்பு மிக்க திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். அதிலும் இது ஐயப்பன் சீசன் என்பதால் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.
இந்த நிலையில் சுவாமி தரிசனத்திற்காக ஆயிரக்கான பக்தர்கள் இன்று காலை சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள். உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள். இதனை தட்டி கேட்ட திருக்கோயில் பணியாளரை தலை முடியை பிடித்து அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் கைகலப்பும் ஏற்பட்டது.
இதில் ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவர் தாக்கப்படார். அவரது மூக்கு உடைந்து மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தன்னை தாக்கிய பாதுகாப்பு பணியில் இருந்து நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காயத்ரி மண்டபம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கோவில் நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆந்திர ஐயப்ப பக்தர்கள் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்கள். பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்கள். மாறி மாறி இரு தரப்பினர்களும் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் கோவிலில் ரத்தம் சிந்தியதால் கோவில் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் நடை திறக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில் பாதுகாவலர்கள் மற்றும் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் இரு தரப்பினர் மீதும் போலீசில் புகார் பதியப்பட்டுள்ளது. திருநெடுந்தாண்டகம் உற்சவம் இன்று இரவு தொடங்க உள்ள நிலையில், இந்த சம்பவம் நடத்திருப்பது பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}