Baba Vanga கணிப்புகள்: 2024ல்.. புடினைக் கொல்ல முயற்சி நடக்கும்.. தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும்

Nov 05, 2023,03:29 PM IST

டெல்லி: பாபா வாங்கா என்ற கண் பார்வை இல்லாத பல்கேரியப் பெண்மணியின் கணிப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை. 2024ம் ஆண்டுக்கு அவர் கூறியுள்ள பல்வேறு கணிப்புகள் அதிர வைப்பதாக உள்ளது. இவையெல்லாம் நடக்குமா  என்ற பரபபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.


பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது இயற் பெயர் வாஞ்செலியா பண்டேவா டிமிட்ரோவா . 1911ம் ஆண்டு பிறந்த இவருக்கு 12 வயது வரை வழக்கமான கண் பார்வை இருந்தது.  ஆனால் இவரது 12வது வயதின்போது அங்கு வீசிய சூறாவளியில் இவரது கண் பார்வை போய் விட்டது. அதன் பிறகு இவர் பல்வேறு கணிப்புகளைக் கூற ஆரம்பித்தார். அவை பலிக்க ஆரம்பித்ததால் மக்கள் வியந்து போய் இவரை எதிர்காலத்தைக் கணிக்கும் ஞானியாக பார்க்க ஆரம்பித்தனர்.




தொடர்ந்து கணிப்புகளைக் கூற ஆரம்பித்த இவர் காலத்தையும் தாண்டி பல்வேறு வருடங்களுக்கான கணிப்புகளைக் கூறி வைத்துள்ளார். இவற்றில் பல உண்மையாகவே நடந்துள்ளன. 1996ம் ஆண்டு இவர் மறைந்தார். 


நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபிள் பேரழிவு, பிரெக்ஸிட் உள்ளிட்டவை இவரது கணிப்புகளில் சில. இந்த நிலையில் 2024ம் ஆண்டு குறித்து இவர் கணித்து வைத்துள்ளது இப்போது பரபரப்பாக உலா வர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இவரது 7 கணிப்புகள் பரபரப்பாக பேசப்படுகின்றன.


-  ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினைக் கொல்ல சதி நடக்கும். அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவரே இதில் ஈடுபடுவார்.


- ஐரோப்பாவில் அதிக அளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும். பெரிய நாடு ஒன்று அடுத்த ஆண்டு உயிரி ஆயுதத்தை  பரீட்சித்துப் பார்க்கும் அல்லது அதை பயன்படுத்தும்.


- மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும். உலக அளவில் இது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். நாடுகளின் கடன்கள் அதிகரிக்கும். பூகோள ரீதியில் பதட்டங்கள் உருவாகும்.


- இயற்கைச் சீற்றங்கள் அதிக அளவில் உருவாகும். கால நிலை மாற்றம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.


- இணையவழி தாக்குதல்கள் அதிகரிக்கும். மின்சார கட்டமைப்புகள், நீர் நிலை கட்டமைப்புகள், தேசிய பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகள் அதிகரிக்கும்.


- அல்ஸீமர், புற்று நோய் போன்ற தீர்க்க முடியாத பல நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.


- குவான்டம் கம்ப்யூட்டிங்கில் புதிய புரட்சி உண்டாகும்.


இதில் எத்தனை பலிக்கப் போகிறது என்று தெரியவில்லை.. 2024 முதல்ல பிறக்கட்டும்.. அதன் பிறகு பாபா பாட்டி சொன்னது போல நடக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.


சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்