பெங்களூரு: பத்திரிகையாளர் மனைவியை ஒழுங்காக டிரஸ் செய்யுமாறும், இல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டி வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பிய பெங்களூரு நபர் வேலையிலிருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் நிக்கித் ஷெட்டி. இவர் எடியோஸ் என்ற நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் InUth தளத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் ஷபாஸ் அன்சர். இவருக்கு வாட்ஸ் ஆப்பில் நிக்கித் ஷெட்டி ஒரு மெசேஜ் போட்டிருந்தார். அதில் உனது மனைவியை ஒழுங்காக டிரஸ் போடச் சொல்லு. இல்லாவிட்டால் அவரது முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டியிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷபாஸ் அன்சர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக பதிவு போட்டிருந்தார். எனது மனைவியை இந்த நபர் மிரட்டுகிறார். இவர் சொல்வது போல நடப்பதற்குள் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறி கர்நாடக மாநில டிஜிபி உள்ளிட்டோரை அதில் டேக் செய்திருந்தார். மேலும் இந்த நபர் எடியோஸ் சர்வீஸஸ் என்ற ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அதுதொடர்பான தகவல்களையும் அவர் ஷேர் செய்திருந்தார்.
இதையடுத்து எடியோஸ் நிறுவனத்திற்கு பலரும் புகார்களை அனுப்பி நிக்கித் ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதையடுத்து தற்போது எடியோஸ் நிறுவனம் நிக்கித் ஷெட்டியை 5 ஆண்டுகளுக்கு வேலையை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தங்களது ஊழியர் இதுபோல நடந்து கொண்டது அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக கூறிய எடியோஸ் நிறுவனம், இதை ஏற்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் சார்பில் தற்போது போலீஸிலும் புகார் தரப்பட்டுள்ளது. விரைவில் நிக்கித் ஷெட்டி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷபாஸ் அன்சர் கூறுகையில் எனது மனைவி கியாதிஸ்ரீயின் உடை குறித்து மிரட்டிய நபருக்கு வேலை போயுள்ளது. அவர் வேலை பார்த்த நிறுவனம் துரித கதியில் செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}