பெங்களூரு : பெங்களூருவில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு பல மாதங்களாக பாடாய் படுத்தி வரும் நிலையில் இன்று 9 மணி நேரம் நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்குவதற்காக காவிரி நீரை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 5ம் கட்ட பணிகளாக தற்போது தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடத்தப்பட உள்ளது. நகரில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் மிக முக்கியமான திட்டம் இதுவாகும். இந்த பணிகளுக்காக பெங்களூருவில் இன்று பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 9 மணி நேரம் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுப்ரமணிய நகர், பிரகாஷ் நகர், சங்கர்நகர், நந்தினி லேஅவுட், சாமுண்டாபுரா, பார்வதிநகர், ராஜாஜிநகர், தசரபல்லி, லட்சுமண்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் தண்ணீர் தேவையை போக்கும் இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பைப்லைன் வேலைகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், இதற்கு குடியிருப்பு வாசிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}