பெங்களூரு: பெங்களூரு எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கன்னடத்தில் பேச முடியாது என கூறிய மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகம் நீங்கள் கன்னடத்தில் தான் பேச வேண்டும் என்று கூற, அதற்கு அந்த வங்கி மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் நான் ஒருபோதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன் என்று அவரிடம் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக கர்நாடகா மாநில முதலைச்சர் சித்தராமையா, தனது எக்ஸ் தள பக்கத்தில், அனேகல் தாலுகா, சூர்யா நகராவில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்தியது என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிகாரியை பணியிடமாற்றம் செய்ய எஸ்பிஐ எடுத்த விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்.
இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். அதேபோல உள்ளூர் மொழியில் பேசுவதற்கு வங்கி ஊழியர்கள் முயற்சி எடுக்க வேண்டும். உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பதாகும். கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் கன்னடத்தில் பேச முயற்சிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியை கட்டாயப்படுத்த மத்திய நிதி மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}