மும்பை: ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவித்துள்ள பிசிசிஐ, இதே அணி இந்தியா- இங்கிலாந்து ஒரு நாள் தொடரிலும் விளையாடும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே டி20 தொடருக்கான அணியை அறிவித்து விட்டது பிசிசிஐ என்பது நினைவிருக்கலாம்.

விக்கெட் கீப்பர்களாக கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் தரப்படவில்லை. முகம்மது சிராஜும் அணியில் இடம் பெறவில்லை. ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய அணி அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் தலைமைத் தேர்வாளர் அஜீத் அகர்கரும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மட்டுமே கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பங்கேற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்டிக் பாண்ட்யா, அக்ஸார் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதிய ஆளுநர்கள் நியமனம்: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரானார் ராஜேந்திர அர்லேகர்
திருந்திய குரங்கு
புதிய பாதை.. ஒரு நிமிடக் கதை (34)
அறுபடை வீடுகளுக்கு நிகரான.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பொய்!
{{comments.comment}}