டெல்லி: மத்திய அரசின் "தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, பெருநிறுவன ஆதரவு" கொள்கைகளைக் கண்டித்து, 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அரசுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய ஊழியர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும், பல்வேறு விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் அமைப்புகளின் ஆதரவுடன் இந்தப் பொது வேலைநிறுத்தமானது பாரத் பந்த் என்று பெயரில் தொடங்கியுள்ளது.

வங்கி, அஞ்சல் சேவை, போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொதுச் சேவைகளில் இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவை பாதிக்கப்படும்?
நிதி சார்ந்த அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிக்கும்.
தபால் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும்.
தொழில் உற்பத்தி வெகுவாகக் குறையலாம்
பேருந்து சேவைகள் பாதிக்கப்படலாம்
அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாகப் பணிகள் முடங்கும்.
விவசாயிகளின் பேரணி உள்ளிட்டவற்றுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது
எவை செயல்படும்?
கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும்.
தனியார் நிறுவனங்கள் இயங்கும்.
ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படாது
எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் தாக்கம் கணிசமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தொழிற்சங்கங்களின் மையம்,
ஹிந்த் மஸ்தூர் சபா, சுயதொழில் புரியும் பெண்கள் சங்கம், தொழிலாளர் முன்னேற்றக் கழகம், ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}