லக்னோ: போஜ்பூரி நடிகர் பவன் சிங், சக நடிகை அஞ்சலி ராகவிடம், பொது மேடையில் மிகவும் கேவலமாக நடந்து கொண்ட விவகாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகரின் இந்த இழிவான செயலால் வெகுண்ட அஞ்சலி ராகவ் போஜ்பூரி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார். மறுபக்கம், பவன் சிங்கின் மனைவி தனது கணவர் குறித்து மிகவும் காட்டமான இன்ஸ்டாகிராம் போஸ்ட் போட்டுள்ளார்.
இந்தியத் திரையுலகமே ஆணாதிக்கம் நிறைந்ததுதான். இங்கு நடிக்கு வரும் பெண்களுக்குப் பெரும்பாலும் பாதுகாப்பு இருப்பதில்லை. இதை சில மாதங்களுக்கு முன்பு வெடித்த மலையாளத் திரையுலக பாலியல் அத்துமீறல் புகார்கள் அம்பலப்படுத்தின. மலையாளத் திரையுலகம் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்துத் திரையுலகிலும் இந்த பாலியல் அத்துமீறல்கள் அதிகம் உள்ளன.
அதிலும் நடிகைகளிடம் பொது இடங்களிலேயே ரொம்பக் கேவலமாக அத்துமீறுவோர் உள்ளனர். தெலுங்கில் பல மூத்த நடிகர்கள் பொது விழாக்களில் தங்களுடன் நடித்த ஹீரோயின்களிடமே முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அதேபோல தமிழ்நாட்டிலும் நடிகர் கூல் சுரேஷ், பெண் தொகுப்பாளினியின் கழுத்தில் மாலை போட முயன்று அநாகரீகமாக நடந்து கொண்டதையும் பார்த்தோம்.
அதே நேரம் சில இயக்குநர்கள், நடிகர்கள் மேடையில் வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியதையும் நாம் கண்டுள்ளோம்.
இடுப்பைப் பிடித்து அத்துமீறல்
இந்த நிலையில் போஜ்பூரி நடிகர் பவன் சிங் என்பவர் தனது சக நடிகை அஞ்சலி ராகவிடம் பொது நிகழ்ச்சியில் மோசமாக நடந்து கொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அஞ்சலி ராகவின் இடுப்பை தொட்டும் விடாமல் அதைப் பிடித்தும் அவர் நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அஞ்சலி ராகவ் தடுக்கத் தடுக்க விடாமல் இடுப்பில் கை வைத்தபடி அவர் செய்த செயல்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அண்மையில் லக்னோவில் நடந்த ஒரு நிகழ்வில், பவன் சிங் , அஞ்சலி ராகவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இடுப்பில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதாகக் கூறி, இடுப்பைப் பிடித்தார் பவன் சிங். அதை அஞ்சலி நாசூக்காக தடுக்க முயன்றபோதும் மீண்டும் மீண்டும் இடுப்பைத் தொட்டு அநாகரீரகமாக நடந்து கொண்டார் பவன் சிங். அஞ்சலி வெளிப்படையாகவே சங்கடப்பட்டபோதும், பவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
சினிமாவுக்கே குட்பை சொன்ன அஞ்சலி ராகவ்
இந்த சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்குள்ளான அஞ்சலி ராகவ், போஜ்பூரி சினிமாவுக்கே குட்பை சொல்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவில், கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்... பொது இடத்தில் இப்படித் தொடும்போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன் அல்லது அதை ரசிப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதாக மீண்டும் மீண்டும் சொன்னார், அதனால் உண்மையிலேயே ஏதோ ஒட்டிக்கொண்டிருக்கும் என்று நான் நினைத்தேன்.
பிறகு, என் குழு உறுப்பினரிடம் ஏதேனும் ஒட்டிக்கொண்டிருந்ததா என்று கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை என்று அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் நான் மிகவும் வருத்தமடைந்தேன், கோபப்பட்டேன், அழவும் தோன்றியது. ஆனால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அங்கு இருந்த அனைவரும் அவரது ரசிகர்கள்; அவரை கடவுள் என்று கூறி, தங்களை பக்தர்கள் என்று அழைத்துக்கொண்டு, மக்கள் அவரது கால்களில் விழுந்தனர்.
எந்த ஒரு பெண்ணையும் அவரது அனுமதி இல்லாமல் தொடுவதை நான் ஆதரிக்க மாட்டேன். இது மிகவும் தவறு. மேலும், இந்த முறையில் ஒருவரைத் தொடுவது மிகவும் தவறானது. இது ஹரியானாவில் நடந்திருந்தால், நான் பதிலளிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது; அங்குள்ள மக்களே பதிலளித்திருப்பார்கள். ஆனால் நான் அவர்களுடைய இடத்தில், அதாவது லக்னோவில் இருந்தேன். நான் இனி போஜ்புரி துறையில் வேலை செய்ய மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
பவன் சிங்கின் இந்த இழிவான செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அதேசமயம், நான் தவறு செய்து விட்டேன் மன்னியுங்கள் என்று கேட்காமல் சுற்றி வளைத்து மன்னிப்பு கேட்டுள்ளார் பவன் சிங். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அஞ்சலி மீது எனக்கு எந்தத் தீய எண்ணமும் இல்லை. அஞ்சலி ஜி, மிகவும் பரபரப்பான வேலை காரணமாக உங்களின் நேரலை உரையை என்னால் பார்க்க முடியவில்லை. இந்த விஷயம் எனக்குத் தெரியவந்தபோது, நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
நாம் இருவரும் கலைஞர்கள் என்பதால், உங்கள் மீது எனக்கு எந்தத் தீய எண்ணமும் இருக்கவில்லை. இருப்பினும், என்னுடைய எந்தச் செயலாவது உங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
என்னைக் கவனிப்பதே இல்லை.. 2வது மனைவி கொந்தளிப்பு
இப்படி ஒரு பக்கம் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்க பவன் சிங்கின் 2வது மனைவி இன்னொரு புயலைக் கிளப்பியுள்ளார்.
அவரது இரண்டாவது மனைவி ஜோதி சிங், இன்ஸ்டாகிராம் பதிவில், பவன் தன்னை பல மாதங்களாகப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டி, தீக்குளிப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் என்ன பெரிய தவறு செய்துவிட்டேன், இப்படி எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது? இன்று, என் பெற்றோரின் பெயர்கள் அவமதிக்கப்பட்டுள்ளன. நான் உங்களுக்குத் தகுதியற்றவள் என்றால், நீங்கள் என்னை விட்டுப் பிரிந்திருக்கலாம். மக்களவைத் தேர்தல் சமயத்தில் எனக்கு வீண் நம்பிக்கை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்று, தீக்குளிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியை நீங்கள் கொடுக்கவில்லை, ஆனால் அதையும் என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் கேள்விகள் எப்போதும் எனக்கும் என் பெற்றோருக்கும் எதிராகவே எழுப்பப்படும் என்று கோபமாக கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பவன் சிங்குக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் நீலம் சிங். இவர் கல்யாணமாகி அடுத்த ஆண்டே தற்கொலை செய்து கொண்டார். அப்போது சக நடிகை அக்ஷரா சிங் என்பவருடன் பவன் சிங் காதலில் இருந்ததாக தகவல்கள் கூறின. ஆனால் பின்னர் அது ஓய்ந்து போய் விட்டது. அதன் பிறகு ஜோதி சிங்கைத் திருமணம் செய்தார் பவன் சிங். பின்னர் அவரிடமிருந்து விவுாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தார். அது இன்னும் முடியா்மல் உள்ளது. இந்த பவன் சிங்குக்கு அந்த ஊரில் பவர் ஸ்டார் என்று பட்டப் பெயர் உண்டாம்.
போஜ்பூரி சினிமா என்பது உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் போஜ்பூரி மொழித் திரையுலகம் ஆகும். ஒரு காலத்தில் நம்ம ஊர் ரம்பா கூட இதில் நிறையப் படங்களில் நடித்து அங்கு பட்டையைக் கிளப்பியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். பல தமிழ்ப் படங்களை போஜ்பூரியில் கூட டப் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது்ம் குறிப்பிடத்தக்கது.
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி
40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!
இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு
விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?
{{comments.comment}}