போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் ஜவுளிக் கடைக்கு தனது மனவியுடன் சென்ற நபரைப் பார்த்து, கடைக்காரர் அங்கிள் என்று கூப்பிட்டதால் அந்த நபர் கோபமடைந்தார். தனது நண்பர்களை கூட்டிக் கொண்டு வந்து கடைக்காரரை சரமாரியாக அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சில ஆண்களுக்கு தங்களை யாராவது அங்கிள் என்று கூப்பிட்டால் பிடிக்காது. அதேபோல சில பெண்களுக்கு ஆன்ட்டி என்று கூப்பிட்டால் பிடிக்காது. அதை கெளரவக் குறைச்சலாக நினைப்போரும் உண்டு. ஆனால் அங்கிள் என்று ஒருவர் கூப்பிட்டதற்காக ஆள் வைத்து அந்த நபரை அடித்து உதைத்துள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்!

மனைவி முன்பு தன்னை அந்த நபர் அங்கிள் என்று கூப்பிட்டதால் வந்த கடுப்பில்தான் இப்படி தகராறு ஆகியிருக்கிறது.
போபால் அருகே உள்ள ஜாட்கோடி என்ற பகுதியில் விஷால் சாஸ்திரி என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஜவுளி கடைக்கு சனிக்கிழமை ரோகித் என்ற வாடிக்கையாளர் தனது மனைவியுடன் சேலை வாங்க வந்துள்ளார். இந்த தம்பதியினர் வெகு நேரமாக புடவைகளை பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர். ஆனாலும் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை.
இவர்கள் ரொம்ப நேரமாக சேலையைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த கடை உரிமையாளர் விஷால் சாஸ்திரி, ரோகித்திடம், உங்களுக்கு என்ன விலையில் புடவை வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ரோகித்தோ 1000 ரூபாய் பட்ஜெட்டில் பார்க்கிறோம். அதை விட ஜாஸ்தியா இருந்தாலும் பரவாயில்லை. என்னால் வாங்க முடியும் என கோபமாக கூறியுள்ளார்.
இதையடுத்து விஷால், ஓகே அங்கிள் என் கூட வாங்க உங்களுக்குப் பிடிச்ச மாதிரி காட்டறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் கோபமாகி விட்டார் ரோஹித். அது எப்படி என்னை அங்கிள்னு கூப்பிடுவே.. இன்னொரு தடவை கூப்பிட்டா அவ்வளவுதான் நடப்பதே வேற என்று கூறி கத்தியுள்ளார். கடைக்காரருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோஹித் பின்னர் சேலை வாங்காமல் மனைவியுடன் கடையிலிருந்து வெளியேறினார்.
சிறிது நேரம் கழித்து நண்பர்களுடன் மீண்டும் கடைக்கு வந்த ரோகித் விஷாலை கடையை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் விஷாலிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த விஷால் காவல் நிலையத்திற்கு சென்று ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்தார். இதன் பின்னர் விஷால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விரைவில் ரோஹித் உள்ளிட்டோர் கைது செய்யப்படசவர் என்று தெரிவித்துள்ளனர்.
அங்கிள்னு கூப்பிட்டது தப்பாய்யா.. இதுக்கெல்லாமா ஆளைக் கூட்டி வந்து அடிப்பது.. என்னா bro இது..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}