பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு

Nov 11, 2025,10:31 AM IST

பாட்னா:  பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இதில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசில் உள்ள அரை டஜன் அமைச்சர்களும் இதில் அடங்குவர். நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு சம்பரான், கிழக்கு சம்பரான், சீதாமார்கி, மதுபானி, சுபால், அராரியா மற்றும் கிஷன்கஞ்ச் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. 


மூத்த ஜேடியூ தலைவர் மற்றும் மாநில அமைச்சரவையில் மிகவும் மூத்தவரான பிஜேந்திர பிரசாத் யாதவ், சுபால் தொகுதியில் தனது எட்டாவது வெற்றியைப் பெறும் முயற்சியில் களத்தில் உள்ளார். அவரது சக அமைச்சரான பிரேம் குமார், 1990 முதல் தொடர்ந்து ஏழு முறை வென்ற கயா டவுன் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், பாஜக அமைச்சர்களான ரேணு தேவி (பெத்தியா), நீரஜ் குமார் சிங் “பாப்லு” (சத்ராபூர்), ஜேடியூ அமைச்சர்களான லேஷி சிங் (தம்ஹா), ஷீலா மண்டல் (புல்பாரஸ்) மற்றும் ஜமா கான் (செயின்பூர்) ஆகியோரின் தலையெழுத்தும் இன்று தீர்மானிக்கப்படும். 




முன்னாள் துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத், கட்டிகார் தொகுதியில் தனது ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற போட்டியிடுகிறார். கட்டிகார் மாவட்டத்தில் உள்ள பால்ராம்பூர் மற்றும் கடவா தொகுதிகளில், சிபிஐ(எம்எல்) லிபரேஷன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர்களான மெஹ்பூப் ஆலம் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகியோர் ஹாட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளனர்.


2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பெரும்பாலான மாவட்டங்கள் சீமாஞ்சல் பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். இது சிறுபான்மையினரின் ஆதரவை நம்பியிருக்கும் இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் அக்னிப் பரீட்சையாக பார்க்கப்படுகிறது. 


வாக்குப்பதிவு 45,399 வாக்குச்சாவடிகளில் நடைபெறும். இதில் 40,073 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. இரண்டாம் கட்டத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (2.28 கோடி) 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். 18-19 வயதுக்குட்பட்டவர்கள் வெறும் 7.69 லட்சம் பேர் மட்டுமே.


122 தொகுதிகளில் மொத்த பெண் வாக்காளர்கள் 1.75 கோடி பேர். நவாடா மாவட்டத்தில் உள்ள ஹிசுவா தொகுதி அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது (3.67 லட்சம்). லௌரியா, சம்பத்தியா, ரக்ஸால், திரிவேணிகஞ்ச், சுகௌலி மற்றும் பன்மாகி ஆகிய தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் (தலா 22 பேர்) போட்டியிடுகின்றனர்.


முதல் கட்டத்தில் 121 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பீகார் இதுவரை இல்லாத வகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவைப் பதிவு செய்தது என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!

news

தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!

news

கூட்ட நெரிசல் விவகாரம்.. அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விரைவில் கரூர் வருகை

news

நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 11, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்

news

அனைத்துக் கோணங்களிலும் விசாரணை.. உண்மையை கண்டறிவோம்.. அமைச்சர் அமித்ஷா

news

டெல்லி செங்கோட்டை அருகே.. கார் வெடித்துச் சிதறியது.. பலர் பலி.. டெல்லி முழுவதும் உஷார்

news

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மனதை உலுக்கியது.. ராகுல் காந்தி, பிரியங்கா வேதனை

அதிகம் பார்க்கும் செய்திகள்