பாட்னா: நீங்க ஒரு அகலமான, பளபளப்பான புது ரோட்ல கார் ஓட்டிட்டு போறீங்கன்னு வச்சுக்குவோம்.. ஒரு குண்டும் குழியும்கூட இல்லை. ரெண்டு பக்கமும் அடர்த்தியா மரங்கள் நிக்குது. வண்டி ஸ்மூத்தா போகுது, காத்து முகத்துல படுது, சுத்தி இருக்கிற இயற்கை அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு. ஆஹா, என்ன ஒரு இனிமையான பயணம்!
ஆனா, திடீர்னு இந்த மரங்கள் எல்லாம் நடு ரோட்டுக்கு வந்துட்டா என்ன ஆகும்? நினைச்சுப் பார்க்கவே தலை சுத்துதுல்ல? பைக் கேம்ல வர்ற மாதிரி, முன்னாடி வர தடைகள தாண்டிப் போகணும், இல்லைனா அவ்வளவுதான்! கற்பனையில மட்டும் இல்லங்க, இது நிஜமாவே நடந்திருக்கு.
நம்ம பீகார்ல, பாட்னால இருந்து 50 கி.மீ தூரத்துல இருக்கிற ஜெஹானாபாத்ல தான் இந்த விபரீதம் அரங்கேறியிருக்கு. அதாவது 100 கோடி ரூபாய் செலவுல போட்ட ரோடு விரிவாக்கத் திட்டத்தில்தான் இப்படி ஒரு கூத்தைப் பண்ணிருக்காங்க.
பாட்னா-கயா மெயின் ரோட்ல, 7.48 கி.மீ தூரத்துக்கு நடு ரோட்டுல மரங்கள் கம்பீரமா நிக்குது. இதுனால தினம் தினம் எத்தனையோ விபத்துகள். இந்த மரங்கள் எல்லாம் ஒரே நாள்ல முளைச்சுடலையே, அப்புறம் எப்படி இப்படி ஆச்சுன்னு? உங்களுக்கு கேள்வி எழும். யாருக்குமே எழத்தான் செய்யும்.
என்ன நடந்தது?

மாவட்ட நிர்வாகம் 100 கோடி ரூபா செலவுல ரோடு விரிவாக்கப் பணியை ஆரம்பிக்கும்போது, மரங்களை அகற்ற வனத்துறைகிட்ட அனுமதி கேட்டிருக்காங்க. ஆனா, வனத்துறை அவங்களோட கோரிக்கைய நிராகரிச்சுடுச்சு. அதுக்கு பதிலா, 14 ஹெக்டேர் வன நிலத்துக்கு இழப்பீடு கேட்டிருக்காங்க. மாவட்ட நிர்வாகத்தால அந்த இழப்பீட்டை கொடுக்க முடியல.
பார்த்துச்சு மாவட்ட நிர்வாகம்.. வினோதமான ஒரு முடிவையும் எடுத்துச்சு.. அதாவது மரங்கள் எதையும் வெட்டலை, அகற்றலை. மாறாக அவற்றைச் சுத்தி ரோடு போட்டுட்டாங்க! இந்த மரங்கள் ஒரு நேர்கோட்ல இல்லாம, அங்கொன்றும் இங்கொன்றுமா நிக்குது. டிரைவர்கள் பாவம், ஒரு ஜிக்ஜாக் ஆட்டம் போட்டுதான் ரோட்ல போகணும். 100 கோடி ரூபாய் பணத்தை இப்படி கொடூரமா கொட்டி வச்சிருக்கு மாவட்ட நிர்வாகம்.
ஏற்கனவே இந்த மரங்களால எத்தனையோ விபத்துகள் நடந்திருக்குன்னு அந்த வழியா போவோர் புலம்புகிறார்கள். மாவட்ட நிர்வாகம் மரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரி தெரியல. பீகார் ஸ்டைலே தனியாத்தாய்யா இருக்கு!
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}