ஆலப்புழா: கேரளாவில் உள்ள சில கோழிப்பண்ணைகளில் வாத்துகள் அடுத்து அடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச் 5 என் 1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால் கேரள எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரம மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் கோழிப்பண்ணைகள் உள்ளன. அங்குள்ள பண்ணைகளில் உள்ள வாத்துகள் அடுதடுத்து இறந்தன. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் அவற்றிற்கு எச் 5 என் 1 என்ற பறவை காய்ச்சல் பரவி இருந்தது தெரிய வந்தது. இதயடுத்து கேரளாவில் உள்ள பண்ணைகளில் உள்ள கோழி மற்றும் வாத்துகளுக்கு தீவிர பறிசோதனை மேற்கொள்ளப்பட்ட வருகிறது. கேரளாவை தொடர்ந்து அங்கிருந்து தமிழகம் வரும் வண்டிகளிலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழி வாகனங்களை சோதனை செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழி, கறிக்கோழி, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள்,வாத்துகள் மற்றும் வாத்து முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களை எல்லைப்பகுதிகளிலேயே நிறுத்தி திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் 1252 கோழிப்பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் அறிகுறி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் சிறப்பு குழுவினர்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}