மாஸ்கோ: ரஷ்யா கடந்த 200 வருடங்களில் இல்லாத அளவிலான சோதனையைச் சந்தித்து வருகிறது. அதாவது அங்கு பிறப்பு விகிதம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத அபாயகரமான அளவுக்கு போய் விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 200 ஆண்டுகளில் இப்படி ஒரு சரிவை ரஷ்யா சந்தித்தது இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பிறப்பு விகிதம் தொடர்பான தகவல்களை அரசு ரகசியமாக மாற்றி அதை வெளியிடக் கூடாது என்று ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தோடு நில்லாமல், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த பல வருடங்களாகவே ரஷ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. மக்கள் தொகையும் சரிந்து கொண்டே போகிறது. அதிலும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்குப் பின்னர் பிறப்பு விகிதம் மேலும் மோசமாகியுள்ளதாம். பலர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

அடுத்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள் தொகை 13.20 கோடியாக குறைந்து போய் விடும் என்றும் கூறப்படுகிறது. இது இதுவரை இல்லாத மோசமான சரிவாகும். இது இன்னும் மோசமாகி அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 8.3 கோடி என்ற அளவுக்கு போய் விடும் என்றும் ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. அதாவ அடுத்த நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ரஷ்யர்கள் என்று ஒரு இனம் இருந்தது, இப்போது அது அழிந்து விட்டது என்று சொல்லக் கூடிய அளவுக்கு அபாயகரமான கோணத்தில் ரஷ்யாவின் மக்கள் தொகை போய்க் கொண்டுள்ளதாம்.
கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெறும் 4 சதவீதமாக இருந்தது. இது கடந்த 1700களின் பிற்பகுதியில் இருந்ததற்குப் பிறகு மிகவும் குறைந்த பிறப்பு விகிதமாகும். பிப்ரவரி மாதத்தில் 6 முதல் 7 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம், மார்ச் மாதத்தில் அடியோடு சரிந்தது ரஷ்ய அரசை அதிர வைத்துள்ளதாம்.
2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் குழந்தை பிறப்பானது 2 லட்சத்து 94 ஆயிரமாக இருந்தது. இது கடந்த ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.4 சதவீதம் குறைவாகும்.
குழந்தை பிறப்பை அதிகரிக்க ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறதாம். கருத்தடைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல குழந்தை பிறப்பு தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பெற்றுக் கொள்ள பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் பெண்களைக் கூட முன்கூட்டியே விடுதலை செய்து அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும், குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனராம்.
உலகின் மிகப் பெரிய நாடு ரஷ்யா என்பது நினைவிருக்கலாம். ஆனால் அங்கு குழந்தை பிறப்பு அடியோடு சரிந்து வருவது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}