விழுப்புரம்: சாத்தனூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம். கால்வாய்களை முன்னெச்சரிக்கையாக தூர்வாரியிருக்க வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தபுரம் கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோர் பாஜக தலைவர் அண்ணாமலை. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரக்காணம் பகுதியில், சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய விவசாயிகளின் மனவேதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு,எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தோம்.

விவசாய நிலம், இறால் பண்ணைகளிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியுள்ளோம். மழை அதிகம் பெய்திருக்கிறது நாங்கள் என்ன செய்வோம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில் ஒரு உண்மை இருக்கிறது. மழை அதிகமாக தான் பெய்கிறது. ஆண்டு தோறும் மழை அதிகமாக தான் பெய்கிறது. ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நேரத்தில் பெய்கிறது.
இந்த வெள்ள பாதிப்பினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியே செல்ல கூடிய பகுதிகளில் தூர்வார வில்லை. கால்வாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து ஒரே நேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் எப்படி மக்கள் அங்கிருந்து தப்பிக்க முடியும். இன்று கிட்டதட்ட 38 கிராமங்கள் தண்ணீரில் மூழ்ங்கியுள்ளன. தென் தமிழ்நாடு மற்றும் வடதமிழ்நாடு இரண்டும் கட்டாகி விட்டது. விழுப்புரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக இருப்பது அரசு முன்கூட்டிய கால்வாய்கள் அனணகளை தூர்வாராமல் இருப்பது தான். சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவில் 20 அடி சேறும்,சகதியுமாக தான் உள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் திறந்திருக்ககூடாது. சாத்தனூர் அணையால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. சாதாரண மழை வந்தாலே மக்களால் தாங்க முடியாத நிலைமையாக உள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அதிக மழை வருவதற்கு முன்பே அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காதது தான் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}