சென்னை: தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன் கடந்த 15ம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று சென்ற அண்ணாமலை, இல.கணேசனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மறைந்த இல. கணேசனுக்கு பாஜக சார்பில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகழஞ்சலி நிகழ்விற்கான அழைப்பிதழையும் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார் அண்ணாமலை.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நிச்சயமாக அவர் வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார். தமிழ்நாட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது எங்கள் கட்சியின் விருப்பம்.

இந்தியா கூட்டணி வேட்பாளரும் நல்ல வேட்பாளர் தான். தமிழக முதலமைச்சர் இந்திய கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இன்னும் நேரம் உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் இருந்து ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. தமிழருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் எல்லோரும் மாநாடு நடத்த உரிமை உள்ளது. தவெக ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறது. செயல்படட்டும். விஜய் நடத்தும் மாநாட்டிற்கும், விஜய்க்கும் வாழ்த்துக்கள். பாஜகவை பொறுத்தவரை, மக்களின் குரலை தேசிய ஜனநாயகக் கூட்டணி பேசி வருகிறது. திமுகவிற்கு மாற்றாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமரும் என்று மக்கள் பேசி வருகிறார்கள். மக்கள் எங்களின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
Swarnalakshmi Writes: செப்டம்பர் 22.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா..?
Inclusive Education in My Classroom: Every Child Matters
Tuesday Special Recipe: நெல்லிக்காய் பச்சடி!
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}