டெல்லி : மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள பாஜக.,விடம் கூட்டணி கட்சிகள் அனைத்துமே மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என அடம்பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாஜக தலைமை மிகப் பெரிய நெருருக்கடியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் 292 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது பாஜக. சிறிய கட்சிகள் சிலவும் பாஜக.,வுக்கு ஆதரவு அளித்துள்ளதால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 303 ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 09ம் தேதி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் 3000 முதல் 4000 பேர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

புதிதாக உருவாக உள்ள மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகளான உள்துறை, நிதி, ரயில்வே, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டம், வெளியுறவுத்துறை போன்ற துறைகளை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் 16 எம்பி.,க்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய துறைகள் சிலவற்றை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கு தேசத்துக்கு எவ்வளவு?
இதுவரை வெளியான தகவல்களின் படி தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 மத்திய அமைச்சர் பதவி மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை ஒப்புக் கொள்ளதாம். இது தவிர மத சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கும் சில அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட உள்ளதாம்.
இந்நிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானை தலைவராக கொண்ட லோக் ஜனசக்தி இணை அமைச்சர் பதவியையும். இந்துஸ்தான் அவாம் மோர்சா ஒரு மத்திய அமைச்சர் பதவியும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இணை அமைச்சர் பதவிதான் கேட்கிறார்கள் என்பதால் அதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.
இப்போதைக்கு சிலருக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்து விட்டு, பின்னர் சிறிது காலம் கழித்து மற்றவர்களுக்கும் அமைச்சர் பதவியைத் தர பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மத்திய புதிய அரசு ஆட்சி அமைப்பதற்காக லோக்சபா கட்சித் தலைவராக மோடியை தேர்வு செய்துள்ளது உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகள் ஒருபுறமும், மோடியின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையிலும் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் மத்திய அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிப்பது பாஜக.,விற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், இதை எளிதாக சமாளிக்கும் பார்முலாக்களை பாஜக கையில் எடுத்து வருவதால் அனைத்தும் சுமூகமாக முடியும் என்று கூறப்படுகிறது.
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}