சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நடந்து வரும் எந்த அரசியல் செயல்பாட்டிலும் பாஜகவுக்குத் தொடர்பில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதே நோக்கத்துடன் சட்டமன்றத் தேர்தலிலும் களம் கண்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகளைக் கட்சியானது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும், அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம்.
தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து இதுவரை பாஜக தரப்பிலிருந்து யாருமே பேசவில்லை. வழக்கமாக எல்லாப் பிரச்சினைக்கும் கருத்து தெரிவிக்கும் அண்ணாமலை கூட அமைதி காத்து வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!
தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம்.. யானை முகம் கொண்ட கணேசன் முதலான கணங்கள்!
எனக்கு ஏன் பெரியாரைப் பிடித்தது?
என் நாவில் தமிழ், என் நெஞ்சில் தமிழ்!
My Companion: The Moon
{{comments.comment}}