NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

Jan 22, 2026,04:55 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் வலிமையாக உருவாகிக்கொண்டிருக்கும் NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், திமு.கவுக்கு ஒத்து ஊதும் இயக்கமாக கம்யூனிஸ்ட் மாறிவிட்டது. கறிக்கோழி பிரச்சனைக்கு திமுக அரசே காரணம். ஓ.பி.எஸ்சைப் பொறுத்தவரை அவர் ஒரு பெரிய தலைவர். நல்ல மனிதர். சத்தியச் சோதனை எல்லாம் கடந்து நிற்கக்கூடியவர். தமிழ்நாட்டில் மிக முக்கியமான தலைவர்.
அரசியலில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது





டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்ன என்பது நன்றாகவே எனக்கு தெரியும்.அவருக்குக் கோபம் இருந்தாலும்கூட, மோடியை விட்டுப் போகக்கூடிய மனிதர் அவர் அல்ல. சில மனக்கசப்பு காரணமாக தற்காலிகமாக அவர் கூட்டணியில் இருந்து விலகி இருந்திருக்கலாம். அவர் நம்முடன் தான் மீண்டும் இணைவார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்பதற்காக சில கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்து தினகரன் அண்ணன் கூட்டணிக்கு வந்திருக்கிறார்.

ரஹ்மான் ஓர் இசை மேதை. தமிழ்நாட்டின் அடையாளம் அவர். எங்கு சென்றாலும் மேடைகளில் தமிழ்தான் பேசுவார். அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை எடுத்து திரித்து அங்கும் இங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. 'ராமாயணா' படத்திற்கு அவர்தான் இசையமைக்கிறார். எல்லாவிதமான படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார். சினிமாத் துறையில் பவர் ஷிஃப்ட் எப்படி மாறி இருக்கிறது என்றுதான் அவர் கூறியிருந்தார். அது அவருடைய கருத்து. அவருடைய ரசிகன் நான். அவர் கருத்து சர்ச்சையான நிலையில் விளக்கம் கொடுத்துவிட்டார். இதில் கனிமொழி அக்காவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

டி.டி.வி.தினகரன் குறித்து எதுவும் தெரியாமல் செல்வப்பெருந்தகை பேச வேண்டாம். மூழ்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூட்டணியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் வலிமையாக உருவாகிக்கொண்டிருக்கும் NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பேச அவர் யார். ஏன் அவர் பேச வேண்டும்? என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

விண்ணகத்துப் பாதையில்.. ஒரு நட்சத்திரம்.. Stellar Trailblazer

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

நாம் நினைத்த வாழ்க்கை வாழ விருப்பமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்