"அதிமுக காத்திருக்கட்டுமே.. பரவாயில்லை.. தவறில்லை".. பாஜக நாராயணன் திருப்பதி!

Feb 01, 2023,09:22 AM IST
சென்னை: ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் பாஜகவினர் வந்து காத்திருந்தனர். இந்த நிலையில்  பாஜகவின் முடிவை அறிவதற்காக, அதிமுக காத்திருக்கலாம் தவறில்லை என்று கூறியுள்ளார் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.



ஜெயலலிதா இருந்தவரை திமுக உள்ளிட்ட அத்தனை கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார். அவரைத் தேடித்தான் அத்தனை பேரும் ஓடி வந்தனர். அவர் யாரையும் போனதில்லை. விஜயகாந்த்தே கூட ஜெயலலிதா வீட்டைத்தான் தேடிப் போக வேண்டியிருந்தது. ஏன் பிரதமர் நரேந்திர மோடி கூட ஜெயலலிதாவின் வீடு தேடி வந்துள்ளார். 

அதிமுக தேசிய அளவிலும், மாநிலத்திலும் அத்தனை கம்பீரமாக இருந்து வந்தது. அப்படிப்பட்ட கட்சியின் இன்றைய நிலை தொண்டர்களை ரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளது. தலைவர்கள் தத்தமது லாபத்துக்காக ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து நிற்கின்றனர். ஆனால் இரு தரப்புமே பாஜகவை அண்டித்தான் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது காலத்தின் கோலம்தான்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுகவின் இரு அணிகள் மற்றும் பாஜக இடையே பெரும் குழப்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. யார் போட்டியிடுவது என்பதில் இதுவரை தெளிவு இல்லை. காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக ஆகியோர் வேட்பாளர்களை அறிவித்து வேலையைத் தொடங்கி விட்டனர்.

அதிமுகவின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிடுகிறதா என்றே தெரியவில்லை. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக இன்று அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவுக்குப் பின்னர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பாஜக போட்டியிடுகிறதா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர் அண்ணாமலை இன்னும் 2 நாட்களில் அறிவிப்பார். இது தேசிய கட்சி. எனவே தேசிய தலைமையிடம் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் முடிவு அறிவிக்கப்படும்.  ஓரிரு நாட்களில் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்.  எந்தக் கட்சியாக இருந்தாலும், போட்டியிட விரும்பத்தான் செய்வார்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப போட்டியிடுவதும் போட்டியிடாமல் இருப்பதும் அந்தக் கட்சி முடிவெடுக்கும்.

நாங்கள் ஏற்கனவே ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளோம். வீடு வீடாக சென்று திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்து வருகிறோம். ஓரிரு நாட்களில் சரியான முடிவை அறிவிப்போம். ஓபிஎஸ், ஈபிஎஸ், ஜான் பாண்டின் வந்துள்ளனர், நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். அனைத்தையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.

யாருடைய மனதும் புண்படாது. இது பண்பட்ட கட்சி.. புண்பட வைக்காது. இரட்டை இலை வழக்குக்கும், எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. எங்களது முடிவுக்காக அதிமுக காத்திருந்தால் பரவாயில்லை. காத்திருக்கட்டும், தவறில்லை என்று பதிலளித்தார் நாராயணன் திருப்பதி.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்