கோவை : தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 90 நாட்களே உள்ள நிலையில், ஆளும் திமுக அரசைத் தோற்கடிக்க பாஜக பூத் லெவல் (Booth level) தீவிர களப்பணியைத் தொடங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் நபின், அடுத்த 90 நாட்களுக்கு பாஜக தொண்டர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளையும், திமுக அரசின் தோல்விகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "பூத்களை வென்றால், தேர்தலை வெல்லலாம்" என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

திமுக அரசின் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் நிர்வாகத் தோல்விகளில் மூழ்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, சனாதன விரும்பிகளை அவமதிப்பதும், போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதும் தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். மோசமான சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு போன்ற உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து பாஜக தொண்டர்கள் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து அதிக கவனம் செலுத்தி, பெண்களை மையப்படுத்திய பிரச்சாரங்களை முன்னெடுக்க நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அடிமட்ட அளவில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனவரி 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது கன்னியாகுமரியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தி, பிரதமருடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை காட்டவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் மேற்கொள்ளவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தேசிய இளைஞர் தினம் (National Youth Day).. யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
கமலஹாசனின் பெயர், போட்டோவை வணிகரீதியாகப் பயன்படுத்த தடை
தொழில்நுட்பக் கோளாறு...பிஎஸ்எல்வி சி62 செயற்கைகோள் இலக்கை அடையவில்லை... இஸ்ரோ விளக்கம்
மார்கழித் திங்கள் அல்லவா.. வாசலில் விரியும் வாழ்வியல் கலை!
'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இதுக்கு ஒரு END கார்டே இல்லையா... மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை...
{{comments.comment}}