மருத்துவ குப்பைகளை.. லாரியில் எடுத்துச் சென்று கேரளாவில் கொட்டுவேன்.. அண்ணாமலை ஆவேசம்

Dec 17, 2024,05:45 PM IST

சென்னை: கேரள மாநிலத்தின் குப்பைக்கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதை திமுக அரசு தடுக்கவேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், கழிவுகள், குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று கேரளாவில் கொட்டுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள அரசு மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள்  அதிகரித்து வருகின்றன. இந்த குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மேலும், எல்லை பகுதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது. இதற்கு எல்லாம் தீர்வு ஏப்போது ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.




இதற்கிடையே, கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருநெல்வேலி ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்,இ்நத விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார். 


கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.


ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன. 


உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்