10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

Nov 15, 2025,02:46 PM IST

டில்லி : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக., பெற்றுள்ள வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கான அசுர வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். பாஜக.,வின் இந்த வளர்ச்சி, இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


இந்திய அரசியலையும், பாஜக.,வின் அரசியலையும் 2014 க்கு முன், 2014 க்கு பின் என இரண்டாக பிரித்து பார்த்தாலே பாஜக.,வின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பது தெளிவாக தெரியும்.


2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அமோக வெற்றியை பெற்று பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பாஜக 66.44 சதவீதம் ஓட்டுக்களை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு முன்பு வரை 1984ம் ஆண்டு காங்கிரஸ் பெற்ற 64.01 சதவீதம் ஓட்டுக்கள் தான் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான ஓட்டு சதவீதமாக இருந்தது. ஆனால் அதை முறியடித்து இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் லோக்சபா தேர்தலில் பெறாத அளவிலான ஓட்டு சதவீதத்தை பெற்று வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்தது பாஜக. 




சரி, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரசிற்கு மாற்று வேண்டும் என நினைத்து மக்கள் ஓட்டளித்ததாக அனைவரும் நினைத்தார்கள். ஆனால் 2019ல் நடந்த அந்த தேர்தலில் 67.40 சதவீதம் ஓட்டுக்கள், 303 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் பாஜக தனித்துவம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்தது.


லோக்சபா தேர்தலில் பெற்ற தொடர் வெற்றிகள், அதிகரித்த ஓட்டு சதவீதங்கள் பாஜக.,வை இன்னும் தைரியமாகவும், உற்சாகமாகவும் அரசியல் செய்ய வைத்தது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தற்போது நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலையும் சேர்த்து 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. எட்டு யூனியன் பிரதேசங்களில் 4 ல் பாஜக ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிக சிலவற்றில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே இடதுசாரிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் இருப்பிலேயே உள்ளன. கேளாவில் மட்டுமே இடதுசாரிகள் ஆட்சி நடைபெறுகிறது.


இன்னும் ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பில் இருக்கும். அதற்குள் இன்னும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக ஆட்சியை பிடித்து விடும். 2014க்கு முன்பு பாஜக கட்சி இருந்த நிலையுடன் ஒப்பிட்டால், இன்றைய வளர்ச்சி அனைவரையும் நிச்சயம் மிரள வைக்கும். பாஜக.,வின் இந்த வளர்ச்சி யாருக்கு ஆபத்து என்று கேட்டால்,  கண்டிப்பாக காங்கிரஸ் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. காங்கிரஸ் தேர்தலுக்குத் தேர்தல் படு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதையே இதற்கு உதாரணமாக காட்டலாம். கூடவே பாஜகவுடன் சேர்ந்த பல கட்சிகளும் கூட காணாமல் போய் வருகின்றன.


அதேசமயம், ஆண்ட கட்சியே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதும், மத்திய மற்றும் மாநிலங்களில் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பது என்பதும் அந்த கட்சி மற்றும் ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கடைசி வரை வெளியே வராமலேயே போகலாம். தங்களை எதிர்க்கவும், கேள்வி கேட்க யாருமே கிடையாது என்ற ஆபத்தான நிலைக்கு ஆட்சியாளர்கள் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இது நாட்டிற்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல. நமது ஆட்சியில் தவறு செய்தால், அடுத்து வரும் ஆட்சியாளர்கள் அதை கண்டிபிடித்து கேள்வி கேட்பார்கள், தண்டனை வழங்கி தருவார்கள், மக்கள் முன் அம்பலப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போய் விடும். அந்த வகையில் எப்போதுமே மாற்றம் என்ற ஆப்ஷன் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அந்த ஆப்ஷனுக்கு தற்போது வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோல்வி ஒரு வேதம்!

news

தமிழகம் முழுவதிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு... இன்றும், நாளையும் நடைபெறுகிறது!

news

மண்டல மகர விளக்குப் பூஜைக்காக. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடைதிறப்பு

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

சாதனை என்பது...!

news

12 வயதில் 2 புத்தகங்கள்.. குவியும் பாராட்டுகள்.. அசத்தும் எழுத்துலக இளவரசி ப்ரீத்தா!

news

பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்