முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Jun 27, 2025,05:11 PM IST

சென்னை:  முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பாளையங்கோட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுவையில், திமுக அண்மையில் நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு உண்மையான முருகன் மாநாடு கிடையாது. திமுக முதலில் நடத்தியது முருகன் பக்தி மாநாடு என்று எங்களுக்கு தெரியாது.




முருகருடைய அருள் எங்களுக்கு தான் கிடைக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப்போட்டு உடைப்பவர்கள். மற்ற மதங்களை இழிவாக பேசுபவர்கள் முருகன் மாநாடு நடத்தினால் முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார். மதுரையில் நாங்கள் நடத்திய முருகன் மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு பக்தி மாநாடு தான்.


இந்த மாநாட்டில்  நாங்கள் அரசியல் பேசவில்லை. பிற மதங்களையோ, வேறு யாரையும் புண்படுத்தியோ பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கவும் இல்லை. இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவுதான். இதை தேர்தல் பயன்பாட்டிற்காகவும், மக்களை குழப்புவதற்காகவும், வாக்கு வங்கியாக மாற்றவும், நாங்கள் முயற்சிக்கவில்லை. நாங்கள் நடத்தியது முருக பக்தர்கள் மாநாடு. ஆனால், இப்போது திமுகவின் அதை திசை திருப்பி வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.


திமுக தொடர்ந்து இரண்டாவது முறை ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அந்த வரலாறு மாறப்போவதில்லை. அதனால், அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.  அதிமுக பாஜக கூட்டணி என்று அமித்ஷா சொன்னதிலிருந்து திமுகவினர் பயத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று ஏற்கனவே அமித்ஷா சொல்லிவிட்டார். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்