சென்னை: தமிழக இளைஞர்கள் கண் முன்னே சீரழிந்து போவதையும், சட்டம் ஒழுங்கு சிதைந்து பாதுகாப்பு பறிபோவதையும் கண்ணாரக் கண்கின்றனர் தமிழக மக்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதை கும்பல் ஒன்று பட்டாக் கத்தி கொண்டு கொடூரமாகத் தாக்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

வடமாநிலத் தொழிலாளி, சேலை வியாபாரி, கல்லூரி இளைஞர்கள் எனத் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் அனைவரும் போதை கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் பலிகடாவாகி வருவது கஞ்சாவின் கைப்பிடியில் திருவள்ளூர் சிக்கியிருப்பதைத் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும், தொடர்ந்து இது போன்ற கோர நிகழ்வுகளில் ஈடுபடுவது, போதை மருந்தின் ஆதிக்கத்தில் உள்ள இளைஞர்கள் தான் என்பதை உற்று நோக்கையில் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
உண்மையில், திருத்தணியில் நடக்கும் போதை வன்முறைகள் ஒரு சிறு துளியே! தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் நடக்கும் வன்முறைகளும் குற்றங்களும் இதைக்காட்டிலும் வரைமுறையற்றது!
ஃபோட்டோஷூட் திமுக ஆட்சியில் போதைக் கலாச்சாரத்தால் தமிழக இளைஞர்கள் கண் முன்னே சீரழிந்து போவதையும், சட்டம் ஒழுங்கு சிதைந்து பாதுகாப்பு பறிபோவதையும் கண்ணாரக் கண்ட தமிழக மக்கள் அறிவாலயத்தை இனி என்றும் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}