சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நசகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அதன் பணிகளை விறுவிறுப்பாக செய்ய தொடங்கி விட்டது. இந்நிலையில் மத்தியில் இருக்கும் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் பணிகளை செய்யத்தொடங்கிய நிலையில், பாஜகவினர் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாதகவை கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், சமீபத்தில் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சென்று சந்தித்து பேசியிருந்தார் என்றும், அதன் பின்னர் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலையும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். அத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் பேசியும் விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். இந்த இரு நிகழ்ச்சிகளால் பாஜகவுடன் நாதக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்காக நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களிலும் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த அழைப்பை சீமான் ஏற்பாரா? அல்லது முந்தைய தேர்தல்களை போலவே நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
{{comments.comment}}