சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பாஜக.,வின் கோரிக்கைகளை ஏற்க ஓபிஎஸ் தொடர்ந்து மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதிமுக இரண்டாக பிளவுபட்ட பிறகு, கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அந்த தேர்தலில் ஓபிஎஸ்.,க்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார். இருந்தும் தொடர்ந்து பாஜக.,வில் தான் இருந்து வந்தார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக அமைதி காத்து வந்த ஓபிஎஸ், சமீபத்தில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை வரவேற்கவும், வழியனுப்பி வைக்கவும் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பிரதமருக்கே கடிதம் அனுப்பி இருந்தார். இருந்தாலும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஓபிஎஸ்.,க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்று, பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ்., கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு ஓபிஎஸ் முன்வைத்த பல கோரிக்கைகளை ஏற்க பாஜக தலைமை மறுத்து விட்டதால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இப்படி பலவிதமான குழப்பங்கள் நடந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்தார். அதுவும் ஒரே நாளில் 2 முறை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போதும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்த நண்பனும் இல்லை என கூறியது திமுக கூட்டணியில் அவர் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் பாஜக சார்பில் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்.,ஐ சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ்.,ஐ பாஜக கேட்டு வருகிறதாம். ஓபிஎஸ் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்தது போல், தற்போது பாஜக.,வின் கோரிக்கைகளை ஏற்க ஓபிஎஸ் மறுத்து வறுகிறாராம். ஒன்றுபட்ட அதிமுக அமையும் வரை பிரதமரை சந்திக்க போவதில்லை என ஓபிஎஸ் உறுதியாக சொல்லி விட்டாராம்.
இதனால் ஓபிஎஸ் அடுத்து என்ன முடிவு எடுப்பார்? அதிமுக அதிருப்தி ஓட்டுக்களை அள்ளுவதற்காக ஓபிஎஸ்.,ஐ தங்கள் கூட்டணியில் இணைக்க திமுக தீவிரம் காட்டுமா? ஓபிஎஸ்.,ஐ சமாதானப்படுத்தி, கூட்டணியில் மீண்டும் இணைக்க பாஜக என்னென்ன முயற்சிகளில் ஈடுபடும்? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதனால் அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, மீண்டும் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமருடன், ஓபிஎஸ்.,ஐ சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}