அருணாச்சல் பிரதேசத்தில்.. தேர்தலே நடக்காமல்.. அதுக்குள்ள 10 தொகுதிகளை வென்று விட்ட பாஜக.. எப்புர்ரா!

Mar 31, 2024,06:16 PM IST

இடாநகர்: அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதால் அங்கு அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 


முதல்வர் பேமா கந்து,  முக்தோ  தொகுதியிலிருந்தும், துணை முதல்வர் செளம்னா மெயின், செளகாம் தொகுதியிலிருந்தும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அருணாச்சல் பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் அதற்குள்ளாகவே 10 தொகுதிகளை பாஜக வென்றிருக்கிறது. இருப்பினும் ஒரு சாதனையை முறியடிக்க தவறி விட்டது பாஜக.


கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி இங்கு 11 தொகுதிகளில் போட்டியின்றி வென்றிருந்தது. அந்த சாதனையை பாஜக முறியடிக்க முடியாமல் போய் விட்டது.  ஐந்து தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மற்ற  5 தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்த பாஜக போட்டி வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் மொத்தம் 10 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.




முதல்வர், துணை முதல்வர் தவிர போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற எட்டு பேர் விவரம்: ரட்டு டெச்சி (சாகலீ தொகுதி), ஜிக்கே டாகோ (தலி), நியாடோ துகாம் (தலிஹா), மட்சு மித்தி (ரோயிங்), ஹாகே அப்பா (ஜிர்ஜோ ஹபோலி), டெச்சி காசோ (இடாநகர்), டோங்க்ரு சியோங்ஜு (பொம்டிலா), தசங்லு புல் (ஹயலியாங்).


இதுகுறித்து முதல்வர் பேமா கந்து கூறுகையில், மக்கள் எங்கள் மீதம், மோடி கியாரண்டி மீதும் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடே இது என்று கூறியுள்ளார். இந்த பத்து தொகுதிகள் மட்டுமல்ல, மீதமுள்ள  50 தொகுதிகளையும் கூட பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். அதேபோல அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளையும் கூட பாஜகவே வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இதில் என்ன விசேஷம் என்றால் இதே முதல்வர் பேமா கந்து, கடந்த 2014 தேர்தலிலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். அப்போது அவர் காங்கிரஸ் சார்பில் வென்றார்.. இப்போது பாஜக சார்பில் வென்றுள்ளார்


சமீபத்திய செய்திகள்

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதிகம் பார்க்கும் செய்திகள்