சென்னை: விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 படத்தில் புதிய அப்டேட்டுகள் இன்று தொடங்கியுள்ளது. 3ம் தேதி வரை தினசரி மாலை 5 மணிக்கு அப்டேட் வெளியாகவுள்ளது. முதல் அப்டேட்டாக நடிகர் பாபி தியோல் இப்படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.இத்திரைப்படத்திற்கு பின்னர் கடையாக ஒரு படம் மட்டும் நடித்து முடிந்த பின்னர் முழு அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கடைசி படத்தின் பணிகளும், மறுபுறம் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு குறித்த வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டில் நடைபெற உள்ளதாக நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறகவித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படத்தில் இயக்குநர் வினோத்துடன் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய் கமிட்டான உடனே இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் அறிவிப்பும் வெளியாகி விட்டது. இப்படத்தை கேவிஎன் புரொடக்ஸன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படமே இதுவாகும். தளபதி 69 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். தளபதி 69 படத்தில் புதிய அப்டேட்டுகள் அக்டோபர் 1,2, மற்றும் 3 ஆகிய நாட்களில் மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று முதல் அறிவிப்பாக நடிகர் பாபி தியோல் விஜய்யுடன் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபி தியோல், பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகன் ஆவார். இந்தியில் வித்தியாசமான வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அனிமல் படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஜய்யுடன் அவர் இணைந்துள்ளார்.
இப்படம் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்யின் கடைசி படம் என்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தளபதி 69 குறித்து வெளியான அறிவிப்பு வீடியோவில் உள்ளே வெளியே கேம் என்று இருப்பதால் இப்படம் குறித்த கதை என்னவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் யூகிக்க தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பைரவும் அபியும்!
சேலத்தில் களை கட்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் பெருவிழா
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலரும் மனது!
வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
{{comments.comment}}