ஷாருக்கானுக்கு சட்டிஸ்கரிலிருந்து வந்த கொலை மிரட்டல்.. ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு உத்தரவு!

Nov 07, 2024,03:17 PM IST

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கொலை மிரட்டல் சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து வந்துள்ளது.


பாலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல்கள் இருந்து வருகின்றன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களால் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இவர் சல்மான் கான், ஷாருக் கானின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தக் கொலையைத் தொடர்ந்து தற்போது சல்மான் கானுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  2 பிரிவுகளின் கீழ் மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டலைத் தொடர்ந்து மும்பையிலிருந்து ஒரு போலீஸ் படை, சட்டிஸ்கருக்கு விரைந்துள்ளது. 


பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுக்கு அடுத்தடுத்து இப்படி கொலை மிரட்டல் விடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக் கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்க மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே சல்மான் கானுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்