சென்னை: சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதவை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளார் அக்கட்சி தலைவர் விஜய். அதற்காக கட்சிப்பணியை தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒருபகுதியாக மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்ய தொடங்கிய விஜய், கடந்த வாரம் சனிக்கிழமை தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கினார். அன்றைய தினம் அரியலூரிலும் பிரச்சாரம் செய்தார். இதற்கு அடுத்த கட்டமாக நாளை நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்குள் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த அருண் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞர் புகுந்துள்ளார். வெளிநபர் ஒருவர் நேற்று முன்தினம் உள்ளே புகுந்து ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்த நிலையில் பிடிபட்டார்.
பிடிப்பட்ட அருண் என்பவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை போலீசார் ஓப்படைத்தனர். ஒய் பிரிவு அதிகாரிகள் பரிந்துரையின் படி விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து போலீசார் சோனை மேற்கொண்டு வருகின்றனர். விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு ஏதெனும் வைத்திருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அலவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், மோப்ப நாயுடன், வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். அவர்களுடன் ஒய் பிரிவு பாதுகாப்பு படையினர் மற்றும் நீலாங்கரை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஆப்பிள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!
மர்ம நபரால் பரபரப்பு... தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை!
நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்
தங்கம் விலை நேற்று போல் இன்று இல்லை... மீண்டும் உயர்ந்தது... கவலையில் வாடிக்கையாளர்கள்
ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்
கிழக்கு ரஷ்யாவை அதிர வைத்த பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
{{comments.comment}}