மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களாகவே பல பள்ளிகளில் வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பிரபல தனியார் பள்ளியான டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அச்சத்தில் உறைந்தனர்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக பள்ளிகளைக் குறி வைத்து தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. பெரும்பாலான மிரட்டல்கள் இ மெயிலில்தான் வருகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர்கள், பிள்ளைகள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை ரிங் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி மற்றும் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளிக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெற்றோர்கள் உடனே பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் என பலரும் சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் சில நாட்களுக்கு முன்பு நட்சத்திர விடுதிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது அடங்கிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடந்துள்ளது.
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பிரபல டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தி வெளியே அமர வைத்தனர். பின்னர் பெற்றோர்களுக்கு குழந்தைகளை வந்து அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தனர். டிவிஎஸ் பள்ளியில் இரண்டு ஷிப்டுகளாக பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மதிய நேர பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பெற்றோர்களும் பதற்றத்துடன் பள்ளிகளுக்கு வந்து குழந்தைகளை அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி பேருந்துகள், மாணவர்களின் சைக்கிள்கள் வகுப்பறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் வந்து சோதனை நடத்தினர்.
இது போன்று மக்களை சிரமப்படுத்தும் வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}