சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ராயப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது.
செவ்வாய்க்கிழமை கிண்டியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னை போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். அதேபோல கடந்த வாரம் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதுவும் புரளி என தெரியவந்தது. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அநாமதேய நபர் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை செய்தனர். நீதிமன்ற வளாகம் உடனடியாக காலி செய்யப்பட்டது.
டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுவும் புரளி என பின்னர் தெரியவந்தது. "உங்கள் கட்டிடத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன - செயல்படுங்கள் அல்லது பேரழிவை சந்தியுங்கள்" என்று அந்த மின்னஞ்சலில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை போலீசார் உடனடியாக விரைந்து வந்து மோப்ப நாய்கள் உதவியுடன் ஒவ்வொரு இடமாக சோதனையிட்டனர். அதிர்ஷ்டவசமாக வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இது ஒரு புரளி மிரட்டல் என தெரியவந்தது. போலீசார் இப்போது அந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியவரை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இந்த வெடிகுண்டு புரளிச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதைய யார் செய்கிறார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியும் அயர்ச்சியும் தருகிறது.
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
பெண் எனும் ஒளி சக்தி.. பெண் கல்வியின் மகாசக்தி.. சாவித்திரிபாய் புலே!
நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி... எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
{{comments.comment}}