டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்

Aug 20, 2025,12:09 PM IST

புது டெல்லி: டெல்லியில் புதன்கிழமையன்று 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. 


திங்கள்கிழமை அன்று 32 பள்ளிகளுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து இன்று 50 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரசாத் நகரில் உள்ள ஆந்திரா பள்ளி, மால்வியா நகரில் உள்ள SKV ஹவுஸ் ராணி ஆகிய பள்ளிகளும் மிரட்டப்பட்ட பள்ளிகளில் அடங்கும். போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நஜாப்கரில் உள்ள ஒரு பள்ளியின் பெயரும் அடிபடுகிறது. ஆனால், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 


"The Terrorizers 111 Group" என்ற குழு இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அவர்கள் 5,000 டாலர் கிரிப்டோகரன்சி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இல்லையென்றால் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.




திங்கள்கிழமை காலையில்தான் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் நகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகளில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக அந்த மின்னஞ்சல்களில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்று மாலையே டெல்லி போலீசார் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று அறிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பள்ளிகளில் தீவிர சோதனை செய்த பிறகு இது உறுதி செய்யப்பட்டது.


"The Terrorizers 111 Group" என்ற குழு தான் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது. பள்ளிகளில் குழாய் வெடிகுண்டுகள் மற்றும் அதிநவீன வெடிபொருட்கள் மிரட்டலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளின் IT கட்டமைப்புகளை ஹேக் செய்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தகவல்களை திருடிவிட்டதாகவும், கண்காணிப்பு கேமராக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும் அந்தக் கும்பல் கூறியிருந்தது.


"72 மணி நேரத்திற்குள் எங்கள் Ethereum முகவரிக்கு $5,000 கிரிப்டோகரன்சியாக அனுப்பவும். இல்லையென்றால் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வோம்" என்று அந்த மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. "உயிர்களை காப்பாற்ற உடனடியாக வெளியேறுங்கள். நாங்கள் மன்னிக்க மாட்டோம். நாங்கள் மறக்க மாட்டோம். பணத்தை அனுப்புங்கள். இல்லையென்றால் விளைவுகளை சந்தியுங்கள்" என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர்.


டெல்லி பப்ளிக் ஸ்கூல்-துவாரகா, பிஜிஎஸ் இன்டர்நேஷனல், குளோபல் ஸ்கூல், துவாரகா இன்டர்நேஷனல், பாபா ஹரிதாஸ் நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு பவுண்டேஷன், நஜாப்கரில் உள்ள ஸ்ரீ ராம் இன்டர்நேஷனல் மற்றும் பிரசாத் நகரில் உள்ள ஆந்திரா பள்ளி ஆகிய பள்ளிகளும் மிரட்டப்பட்ட பள்ளிகளில் அடங்கும்.


இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குத்தகைக்கு ஓட்டுனர், நடத்துனர் நியமனம்...சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்: டாக்டர் அன்புமணி

news

திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!

news

மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ

news

46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!

news

தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா

news

டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்

news

பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!

news

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்

அதிகம் பார்க்கும் செய்திகள்