முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Oct 03, 2025,06:28 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீடு மற்றும் நடிகை திரிஷாவின் வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகள், பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ஒரு பேஷனாகி வருகிறது. இமெயில்களில்தான் இப்போதெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், காவல்துறையினர், என எல்லோருக்குமே பெரும் சிரமம் ஏற்படுகிறது.


இந்த நிலையில் ஆளுநர் மாளிகை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு  தற்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று இமெயில் மூலமாக வந்துள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களில் காவல்துறையினர் மோப்ப நாய்கள் மூலம் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.




முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீடு ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.


சமீபத்தில் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து, மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் அவரது வீட்டில் சோதனை போட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்