சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி வியாழக்கிழமை வருவதால், அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்ற தமிழக அரசு வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறையை சரிசெய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி அன்று வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தீபாவளிக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இது மட்டும் இன்றி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.
சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் பதவிகளில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை பேனஸ் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 வரை போனஸ் வழங்கப்பட உள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டுதலில் டாஸ்மாக் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. 2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் கிட்டத்தட்ட ரூ. 46,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது 2003-04 ஆண்டு காலகட்டத்தில் வெறும் ரூ. 3,600 கோடியாக மட்டுமே இருந்தது என்பது நினைவிருக்கலாம். தனியாரிடம் இருந்த மது பார்கள், மதுக் கடைகள், மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுடமை ஆக்கப்பட்டன. அதிலிருந்து அரசுக்கு டாஸ்மாக் மூலம் பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க ஆரம்பித்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}