சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் ஏஜெண்டுகள் மாநாட்டை கோவையில் நடத்த தவெக கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகரும், தவெக கட்சி தலைவருமாகி விஜய். தவெக என்ற கட்சியை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு காய்களையும் துரிதமாக நகர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு பகுதியாக, 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் 120 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு உறுப்பினர்கள் வீதம் என பிரித்து மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தை விறுவிறுப்பாக செய்து முடித்தார்.கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வரும் விஜய், அக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறப்பாக நடத்தினார். அதில் நான் எதிர்க்கும் கட்சிகளின் தலைவர் குறித்தும் காரசாரமாக பேசியிருந்தார் விஜய்.
இந்நிலையில், கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிப்பணியாக பூத் ஏஜெண்டுகள் மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள 60,000 ஆயிரம் பூத்துகளில் ஏஜெண்டுகம் நியமிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டை மண்டல வாரியாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்த பூத் ஏஜெண்டுகள் மாநாடு முதல் கட்டமாக கோவையில் நடத்த இருப்பதாகவும், அந்த மாநாட்டிற்காக கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பூத் ஏஜெண்ட் மாநாட்டை கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடத்தவும், மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவும் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. பூத் ஏஜெண்ட் மாநாடு நடைபெறும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}