பேசாம நீங்க அங்க போய்ருங்க.. சென்னை சிறுமியைக் கடித்த.. 2 நாய்களும் மதுரைக்கு இடமாற்றம்!

May 07, 2024,05:19 PM IST
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை கடித்த ராட்வெய்லர் நாய்கள் இரண்டும், தற்போது மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. நாய் உரிமையாளர் புகழேந்தியின் மகன் வீட்டுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா  காவலாளராக இருப்பவர் ரகு. இவர் தனது மகள், மனைவியுடன் அதே பூங்காவில் குடியிருக்கிறார். சம்பவத்தன்று புகழேந்தி என்பவரின் இரண்டு ராட்வெய்லர் நாய்களும் அங்கு வந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த ரகுவின் மகள் மீது பாய்ந்து கடித்து விட்டன. அதைத் தடுக்க முயன்ற ரகுவின் மனைவியையும் அவை கடித்தன. நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் புகழேந்தி அங்கிருந்து ஓடி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டி இருவரையும் மீட்டனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புகழேந்தியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.  நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட மூவரும் பின்னர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 



சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளர் புகழேந்திக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டஸ் அனுப்பியது. நோட்டீசில், நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி  இந்த நாய்களை பறிமுதல் செய்யும். நாயின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது 2 நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு புகழேந்தி இடம் மாற்றம்  செய்துள்ளார். அங்கு இந்த நாய்களை அவரே கொண்டு போய் விடுவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளாராம்.

சமீபத்திய செய்திகள்

news

நீ தானே எந்தன் பவள மல்லி!

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்