- டிலாணி ஸ்ரீதரன்
ஆறாத வேதனைகளும் மாறாத சோதனைகளாகிட
வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்,
மலராத வாழ்வும் புலராத பொழுதுகளாகிட
மங்காத ஒளியும் கலையாத இருளாக்கிடும்,
அயராத உழைப்பும் அணையாத விளக்காகிட
உறையாத உதிரமும் மெருகேறாத மேனியாகிடும்,
சுடாத சோறும் விடாத வறுமையுமாகிட
படாத பாடும் அறியாத அனுபவமாக்கிடும்,
கரையாத கவலைகளும் குறையாத குழப்பங்களுமாகிட
முதிராத வயதும் உதிராத பூக்களாகிடும்,
வருடாத இன்பங்களும் நெகிழாத இதயங்களாகிட
வாடாத முகங்களும் ஆடாத ஆழியாகிடும்,

மீளாத சோகங்களும் மீட்டாத வீணையாகிட
வளராத வம்புகளும் உள்ளாறாத தீயாகிடும்,
செவி சேராத வார்த்தைகளும் விழிக்காணாத கதைகளாகிட
தளராத தன்னம்பிக்கையும் வளராத வாழ்க்கையாக்கிடும்,
தெளிவில்லாத சிந்தனையும் ஓய்வில்லாத பிரச்சனையுமாகிட
வானுயராத குடும்பமும் தானுயராத நிழலாகிடும்,
வளையாத பாதைகளும் வாய்மொழியாத ரணங்களாகிட
உருகாத உள்ளமும் கல்லூறாத நீராகிடும்.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}