கோழிக்கோடு: கேரளாவில், மூளையை திண்ணும் ஆமீபாவால், ஏரி மற்றும் குளங்களில் குளித்த 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 4வது சிறுவன் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த மூவரும் ஆறு, குளங்களில் குளிக்கும் போது அவர்களது மூக்கின் வழியாக சென்ற அமீபாவால் தான் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை திசுக்களை அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இறந்து போவதாக அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
மூளையைத் தின்னும் இந்த அமீபா ஒரு செல் உயிரின வகையைச் சேர்ந்ததாகும். இவை வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை ஆகும். நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளங்கள், ஏரி, ஆறு ஆகியவைகளில் தான் இந்த அமீபாக்கள் அதிகம் காணப்படுகின்றன. இது போன்ற இடங்களில் குளிக்கும் போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கிறது. இது மூக்கின் வழியாக சென்று மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
பின்னர் இந்த தொற்று ஏற்பட்டவர்கள் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். குளோரின் கலக்கப்படாத நீர்நிலைகளில் இந்த அமீபா காணப்படுகிறதாம். பொதுவாக அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 பேருக்கும் குறைானவர்களே இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இறந்துவிடுகின்றனர் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் சிடிசி கூறுகிறது.
இந்த அமீபா பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுமாம். அமீபா வேகமாக வளரும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 1 முதல் 18 நாட்களுக்குள் இறந்து விடுகின்றனர்களாம். பொதுவாகத் தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணம் எற்படுகிறது என்று சிடிசி தெரிவித்துள்ளது. இது உடலில் வளரும் போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு, மாயத்தோற்றம் ஆகியவை ஏற்படுவதாக சிடிசி தெரிவித்துள்ளது. இந்த தொற்று அரிதாக ஏற்படுவதால், இந்த பாதிப்பு ஏற்பட்ட நபர் இறந்த பிறகு தான் இது குறித்து அறிய முடிவதாகவும் சிடிசி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}