சார்லஸ் மன்னரை விட பெரும் பணக்காரர்களான.. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக், மனைவி அக்ஷதா மூர்த்தி

May 19, 2024,09:16 PM IST

லண்டன்: பிரிட்டிஷ் மன்னர் சார்லஸை விட, பிரதமர் ரிஷி சுனாக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் பணக்காரர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.


பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு என்பது, மன்னர் சார்லஸின் தனிப்பட்ட சொத்துக்களை விட அதிகமாக இருப்பதாக சன்டே டைம்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தில் வசிக்கும் 1000 பெரும் பணக்காரர்கள் பட்டியலை சன்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோபிசந்த் இந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர். நம்ம ஊர் அசோக் லேலன்ட் நிறுவனத்தினர்தான் இவரக்ல். இவர்களது சொத்து மதிப்பு 37.19  பில்லியன் பவுண்டு ஆகும். 




இந்தப் பட்டியலில் பிரதமர் ரிஷி சுனாக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் 651 மில்லியன் பவுண்டுகளுடன் 245வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்குப் பின்னால்தான் மன்னர் சார்லஸே வருகிறார். அவரது சொத்து மதிப்பு 610 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இவருக்கு 258வது இடம் கிடைத்துள்ளது.


இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து அக்ஷதா மூர்த்திக்குக் கிடைத்த பங்குகளைத் தொடர்ந்தே ரிஷி சுனாக் - அக்ஷதாவின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின்  மகள்தான் அக்ஷதா என்பது நினைவிருக்கலாம். மேலும் இங்கிலாந்து பிரதமர்களாக இருந்தவர்களிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையும் ரிஷி சுனாக்கிற்குக் கிடைத்துள்ளது.


ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டு மறைந்த ராணி எலிசபெத்தின் சொத்துக்களை விட அதிக சொத்து மதிப்பு உடையவராக இருந்தவர் ரிஷி சுனாக் என்பது நினைவிருக்கலாம். தற்போது மன்னரை முந்தியுள்ளார்.


இந்தப் பட்டியலில் டாப் 10 பட்டியலில் இந்துஜாவுக்கு அடுத்து, 8வது இடத்தில் இனனொரு இந்தியரான லட்சுமி மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு 14.921 பில்லியன் பவுண்டுகள் ஆகும். ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தை மிட்டல் நடத்தி வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்